பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு கெடுபிடி :பக்தர்கள் செல்ல தடை
பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு கெடுபிடி :பக்தர்கள் செல்ல தடை
பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு கெடுபிடி :பக்தர்கள் செல்ல தடை

இதில், அங்குள்ள ஆறு அறைகளில் ஐந்து அறைகளை மட்டுமே திறந்து பார்த்த அக்கமிட்டியினருக்கு, அங்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பொக்கிஷங்கள் இருப்பது தெரிந்தது. இந்நிலையில், ஆறாவது அறையை (பி அறை) திறக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து தற்போது, அவ்வறைகளில் உள்ளவற்றை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட கமிட்டியை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது.இக்கமிட்டியின் தலைவராக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் டாக்டர் ஆனந்த்போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கோவிலின் பாதாள அறைகள் இருக்கும் பகுதி என சந்தேகிக்கப்படும் தெற்கு கோபுரம் வழியாக, பக்தர்கள் அங்குள்ள ஒற்றைக்கால் மண்டபத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில், பக்தர்கள் இனிமேல் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்.தெற்கு வாசல் வழியாக அனுமதி நிறுத்தப்படும். அவ்வழியே கோவில் ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் தவிர, வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. கோவில் ஆசாரங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு இல்லாத நிலையில் அனுமதி வழங்குவது குறித்து, கோவில் நிர்வாக அலுவலர் அரிகுமார் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், போலீஸ் எஸ்.பி., அனில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு போலீசாருக்கு கோவில் ஆசாரங்கள் குறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேல்சாந்தியிடம் பரிசோதனை:பத்மநாப சுவாமி கோவில் பத்மகுளத்தில், கோவில் பணிகளுக்காக குளித்து விட்டு கோவிலுக்கு வந்த, மேல் சாந்தி நம்பி என்பவரை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை சோதனையிட்டனர். கோவில் குளத்தில் குளித்து விட்டு ஆசாரமாக கோவிலுக்குள் நுழைந்த அவரை, போலீசார் தொட்டு களங்கப்படுத்தி விட்டதாக பலரும் புகார் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் ஆசாரப்படி வேட்டி (முண்டு) அணிந்திருந்ததில், ஒரு பகுதி வீங்கி பெரிதாக காணப்பட்டது தான் அவரை போலீசார் சோதனையிட காரணமாகி விட்டதாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.இதுபோன்ற பிரச்னைகள் வருங்காலத்தில் ஏற்படாதவண்ணம் தடுக்கவே, கோவில் அதிகாரிகளும், பாதுகாப்பு போலீசாரும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.முதல்வர் பேட்டி'பத்மநாப சுவாமி கோவிலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த அறிக்கையை போலீசார், மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையை பரிசீலித்த பின், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
பொக்கிஷங்கள் உள்ள அறைகளில் சென்சார் கருவிகளை பொருத்தவும், பாதாள அறை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பாதாள அறையை பயன்படுத்துவோர் கைரேகை பதிவு செய்யும் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என, போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.