ADDED : செப் 08, 2011 10:39 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலின் போது, ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களின் பட்டியலை போட்டியிட உள்ளவர்கள் தயாரித்து வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்கள், தங்கள் வார்டுகளின் எல்லைகள், வீடுகளின் எண்ணிக்கை, வாக்காளர் எண்ணிக்கை, கட்சி சார்ந்தவர்கள், நடுநிலையாளர்கள்,ஆதரவாக ஓட்டளிப்பவர்கள், ஓட்டுக்கு பணம் எதிர்பார்ப்பவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகின்றனர். தங்கள் வெற்றிக்கு தேவையான ஓட்டுகளுக்கு பணம் கொடுக்கவும் இப்போதே தயாராகி விட்டனர். அதற்கேற்ப பணம் கொடுக்க வேண்டியவர்கள் பட்டியலை தயாரித்துள்ளனர்.