/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தி.மு.க., பிரமுகர் மனு தள்ளுபடி கண்டமங்கலத்தில் மறியல் முயற்சிதி.மு.க., பிரமுகர் மனு தள்ளுபடி கண்டமங்கலத்தில் மறியல் முயற்சி
தி.மு.க., பிரமுகர் மனு தள்ளுபடி கண்டமங்கலத்தில் மறியல் முயற்சி
தி.மு.க., பிரமுகர் மனு தள்ளுபடி கண்டமங்கலத்தில் மறியல் முயற்சி
தி.மு.க., பிரமுகர் மனு தள்ளுபடி கண்டமங்கலத்தில் மறியல் முயற்சி
ADDED : அக் 01, 2011 12:27 AM
விழுப்புரம் : கண்டமங்கலத்தில் தி.மு.க., பிரமுகரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மறியலுக்கு முயன்றனர்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.வில்லியனூரைச் சேர்ந்த நிர்மலா தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவரின் மனுவை சிறுவந்தாடு அசோக்குமார் முன்மொழிந்திருந்தார்.மனுக்கள் மீதான பரிசீலனை கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது அசோக்குமார் சுயேச்சை வேட்பாளரான செந்தில்குமாரி மனுவிற்கும் முன் மொழிவு செய்திருந்தது தெரிந்தது.பரிசீலனையில் செந்தில்குமாரி மனுவிற்கு அசோக்குமாரின் முன்மொழிவு ஏற்றுக் கொள் ளப்பட்டது. தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நிர்மலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் மாலை 4 மணிக்கு பி.டி.ஒ., அலுவலகத்தில் கூடியிருந்த தி.மு.க., வினர் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். டி.எஸ்.பி., சேகர் மற்றும் போலீசார் மறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.