பேராசிரியர் நியமன முறைகேடு கவர்னர் ரவி விளக்கம் கேட்பு..
பேராசிரியர் நியமன முறைகேடு கவர்னர் ரவி விளக்கம் கேட்பு..
பேராசிரியர் நியமன முறைகேடு கவர்னர் ரவி விளக்கம் கேட்பு..
ADDED : ஜூலை 26, 2024 12:43 AM

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளின் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் எழுந்த முறைகேடு புகார் குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தரிடம், கவர்னர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அங்கீகாரம் மற்றும் இணைப்பு சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
இதற்கு, உள்கட்டமைப்பு, பேராசிரியர்கள், பணியாளர்கள் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அவற்றை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை குழுவினர் ஆய்வு செய்வர்.
இந்த ஆண்டு இணைப்பு பெற்ற கல்லுாரிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வேறு கல்லுாரிகளிலும் பணியாற்றுவதாக போலி ஆவணம் தாக்கல் செய்துள்ளதாக, 'அறப்போர் இயக்கம்' அமைப்பு புகார் தெரிவித்தது.
இது குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையிலான குழுவினர் விசாரித்ததில், 189 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவதாக பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அண்ணா பல்கலை மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் குழு நடத்திய ஆய்வுகளில், போலி விபரங்களை கண்டறியாமல் விட்டது எப்படி என்பது குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பேராசிரியர் நியமன விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு, கவர்னர் அலுவலகமும், உயர் கல்வித் துறையும், துணை வேந்தருக்கு உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.