/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வரலாற்று ஆசிரியர்களுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி வரலாற்று ஆசிரியர்களுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி
வரலாற்று ஆசிரியர்களுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி
வரலாற்று ஆசிரியர்களுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி
வரலாற்று ஆசிரியர்களுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி
ADDED : ஜூலை 26, 2024 12:43 AM

சென்னை, அருங்காட்சியகங்கள் துறை சார்பில் நேற்றும், நேற்று முன்தினமும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, எழும்பூரில் களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்த இந்த பயிற்சியில், தமிழகம் முழுதும் இருந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சென்னை அருங்காட்சியக தொழில்நுட்ப பிரிவு உதவி இயக்குனர் சுந்தரராஜன், முதல் நாள் பயிற்சி வகுப்பை துவக்கினார்.
இவர் நேற்று, நாணயவியல் வழியே வரலாற்றை கட்டமைப்பது, நாணயங்களில் உள்ள சிற்பங்களை அறிவது உள்ளிட்ட தகவல்களை அளித்தார்.
இவரைத் தொடர்ந்து கலைப்பிரிவு காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, தற்கால கலைக்கூடத்தில் உள்ள கலைப்பொருட்களை விளக்கினார். சிற்பக்கலைகளின் வளர்ச்சி, வரலாறு, சோழர்களின் செப்புத்திருமேனிகள் குறித்து, தொல்லியல் துறை காப்பாட்சியர் பன்னீர்செல்வம் விளக்கினார். பச்சையப்பன் கல்லுாரி வரலாற்று துறை தலைவர் சரவணன், தமிழக கட்டட கலை வளர்ச்சி பற்றி விளக்கினார்.
பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு வகுப்புகளில் பங்கேற்ற ஆசிரியர்கள், அங்குள்ள சிற்பங்கள் குறித்து கேட்டறிந்தனர். இடம்: எழும்பூர்.