Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/புதிதாக பதவியேற்ற எஸ்.பி., பணிகள் ஆந்திரா மாநில ஓய்வு டி.ஜி.பி., ஆய்வு

புதிதாக பதவியேற்ற எஸ்.பி., பணிகள் ஆந்திரா மாநில ஓய்வு டி.ஜி.பி., ஆய்வு

புதிதாக பதவியேற்ற எஸ்.பி., பணிகள் ஆந்திரா மாநில ஓய்வு டி.ஜி.பி., ஆய்வு

புதிதாக பதவியேற்ற எஸ்.பி., பணிகள் ஆந்திரா மாநில ஓய்வு டி.ஜி.பி., ஆய்வு

ADDED : செப் 27, 2011 11:47 PM


Google News
திருச்சி: தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் செயல்பாடு குறித்து, ஆந்திரா மாநில ஓய்வுபெற்ற டி.ஜி.பி., டோரா திருச்சியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் சில ஆண்டுகளில் எண்ணற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.,க்களாகவும், போலீஸ்துறையில் பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் செயல்பாடு, வேலைத்திறன் எப்படி இருக்கிறது என்பதை, ஹைதராபாத்திலுள்ள போலீஸ் அகாடமி ஆலோசகராக இருக்கும், ஆந்திரா மாநில ஓய்வு பெற்ற டி.ஜி.பி., டோரா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று திருச்சி வந்த அவர், கண்டோன்மெண்ட் போலீஸ் கிளப்பில் தங்கினார். அவரை, ஐ.பி.எஸ்., முடித்து, தமிழகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த நாகை, தஞ்சை, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் எஸ்.பி.,க்கள் சந்தித்து பேசினர். ஒவ்வொரு எஸ்.பி.,யிடமும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., டோரா தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களின் பணி, புதிய திட்டங்கள் செயலாக்கம், புதிய வியூகம் ஆகியவை குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு பணியாற்ற பயனுள்ள புதிய ஆலோசனை வழங்கியுள்ளார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி., டோராவை நாகை மாவட்ட எஸ்.பி., ராமர், தஞ்சை மாவட்ட எஸ்.பி., அனில்குமார் கிரி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார் மீனா, நாமக்கல் எஸ்.பி., பிரவேஷ்குமார் ஆகிய நான்கு பேரும், தனித்தனியே ஒரு மணிநேரத்துக்கு மேலாக சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் ஆய்வை முடித்துக் கொண்ட ஓய்வு பெற்ற டி.ஜி.பி., டோரா மதுரை மண்டலத்தில் பணியாற்றும் புதிய எஸ்.பி.,க்களின் பணிகள் குறித்து ஆய்வு நடத்த, மதுரை புறப்பட்டுச் சென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us