காங்கிரஸ் தலைவர்கள் போட்டி உண்ணாவிரதம்
காங்கிரஸ் தலைவர்கள் போட்டி உண்ணாவிரதம்
காங்கிரஸ் தலைவர்கள் போட்டி உண்ணாவிரதம்

ஆமதாபாத்:நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு போட்டியாக, சங்கர் சிங் வகேலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.குஜராத் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் வகையில், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஆமதாபாத்தில் நேற்று உண்ணாவிரதத்தை துவக்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் வகேலா கூறியதாவது:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக, இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார். இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில் தரை இறங்கிவிட்டதா? இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு வகேலா கூறினார்.
ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர்:தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம் என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை. இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச் சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது''