Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தெற்கு தொகுதி மக்கள் குறை கேட்க நாஜிம் எம்.எல்.ஏ., கேம்ப் ஆபீஸ் திறப்பு

தெற்கு தொகுதி மக்கள் குறை கேட்க நாஜிம் எம்.எல்.ஏ., கேம்ப் ஆபீஸ் திறப்பு

தெற்கு தொகுதி மக்கள் குறை கேட்க நாஜிம் எம்.எல்.ஏ., கேம்ப் ஆபீஸ் திறப்பு

தெற்கு தொகுதி மக்கள் குறை கேட்க நாஜிம் எம்.எல்.ஏ., கேம்ப் ஆபீஸ் திறப்பு

ADDED : ஜூலை 11, 2011 11:38 PM


Google News

காரைக்கால் : காரைக்கால் தெற்கு தொகுதியை மேம்படுத்த கேம்ப் ஆபிஸ் திறந்து, நாஜிம் எம்.எல்.ஏ., மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.

காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., நாஜிம் கடந்த காலத்தில் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தொகுதி மறுசீரமைப்பால் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பரந்து விரிந்துள்ள இத்தொகுதியில் உள்ள மக்களை சந்திக்கும் பொருட்டு, கேம்ப் ஆபீஸ் தொடங்கியுள்ளார். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் தொகுதி மக்கள் குறைகளை கேட்டறிகிறார்.



இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில்; கடந்த 20 ஆண்டுகளாக வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். அங்குள்ள அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். தற்போது தெற்கு தொகுதியில் வெற்றி பெற் றுள்ளேன். தற்போதுள்ள கட்சி அலுவலகம் வெகு தூரத்தில் உள்ளதால். மக்களை சந்திப்பது கடினமாக உள்ளது.

இதற்காக இங்கு கேம்ப் ஆபிஸ் துவக்கி யுள்ளேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் தொகுதியின் அந்தந்த பகுதிகளுக்கு சென்று தற்காலிக அலுவலகம் அமைத்து மக்களை சந்திக்கும் பணியினை துவக்கியுள்ளேன். இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மக்களை நேரடியாக சென்று சந்திப்பேன். வரும் வாரத்தில் மேலஓடுதுறை, தடுஓடுதுறை, தருமபுரம், பச்சூர், தக்களூர் பகுதிகளில் கேம்ப் ஆபிஸ் நடத்தப்படும் என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us