Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது: சித்தராமையா

ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது: சித்தராமையா

ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது: சித்தராமையா

ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது: சித்தராமையா

UPDATED : ஜூலை 14, 2024 06:48 PMADDED : ஜூலை 14, 2024 06:42 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: ஒரு டி.எம்.சி., தண்ணீரை கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய, காவிரி நீரை வழங்க உத்தரவிடும்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது. இம்மாதம் இறுதி வரை, தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி, உத்தரவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடும் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் விடுவிப்பது குறித்து கர்நாடகா மாநிலத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் சிவகுமார், எதிர்கட்சி தலைவர் அசோக், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த படி தண்ணீரை திறந்து விட முடியாது. தினசரி 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடியும். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணயத்தில் மேல் முறையீடு செய்யவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 11500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us