ADDED : ஆக 26, 2011 01:32 AM
திருச்சி: ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலை மாணவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை வளாகம் முன் நேற்று நடந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில், பி.டெக்., மாணவர்கள் நாகராஜன், ராஜேஷ் உள்ளிட்ட 100 பேர் பங்கேற்றனர்.வலுவான லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் மீட்க வேண்டும். லஞ்ச, லாவண்யமற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.போராட்டத்தில், 'லஞ்சம் வாங்கவும் மாட்டோம்; கொடுக்கவும் மாட்டோம்' என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.