/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டடம் : சமூக விரோதிகள் புகழிடமாக மாறும் அவலம்பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டடம் : சமூக விரோதிகள் புகழிடமாக மாறும் அவலம்
பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டடம் : சமூக விரோதிகள் புகழிடமாக மாறும் அவலம்
பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டடம் : சமூக விரோதிகள் புகழிடமாக மாறும் அவலம்
பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டடம் : சமூக விரோதிகள் புகழிடமாக மாறும் அவலம்
ADDED : ஆக 02, 2011 11:36 PM
காரியாபட்டி : காரியாபட்டி தோனுகாலில் திறப்பு விழா நடத்தி மாதங்கள் பலவாகியும் பயன்பாட்டிற்கு வராத அரசு பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் தவிக்கின்றனர்.
காரியாபட்டி அருகே தோனுகால் அரசு நடுநிலைப்பள்ளியால் வக்கணாங்குண்டு, கரியனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராம மாணவர்கள் பயன் பெறுகின்றனர் . இதை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி கிராமத்தினர் வலியுறுத்தியதையடுத்து, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்ததால் மாணவர்கள் சிரமம் பட்டனர். இதை தொடர்ந்து அடிப்படை வசதிகளுடன் பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. போதிய இட வசதி இல்லாததால், கிராமத்தினரே கிராம நிதியிலிருந்து பள்ளி அருகே இடம் வாங்கி கொடுத்தனர். அந்த இடத்தில் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 சதவீத கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. மீதமுள்ள பணிகள் முடிவடையும் முன், கடந்த ஆறு மாதத்திற்கு முன் தி.மு.க.,ஆட்சியில் அவசர அவசரமாக திறப்பு விழா நடத்தப்பட்டது.ஆனால் திறப்பு விழா நடத்தப்பட்ட கட்டடம் பயன்பாட்டிற்கு வராது உள்ளதால் மாணவர்கள் பாதிக்கின்றனர் . தற்போது கட்டடம் ஆடு, மாடுகள் மற்றும் சமூக விரோதிகளின் புகழிடமாக மாறி வருகிறது. 250 மாணவர்கள் படிக்கும் இங்கு போதிய கட்டடம், அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்கள் தவியாய் தவிக்கின்றனர். பல லட்சம் ரூபாய ஞூமதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்தாமல், அரசு பணத்தை வீணடிப்பதாக கிராமத்தினர் புலம்புகின்றனர். தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது,''தனியாரிடம் இடம் வாங்கித்தான் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. சுற்றுசுவர், மின் சப்ளை, வாட்டர் சப்ளை என முழுமை அடையாமல் உள்ளது. பழைய கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். கட்டடத்தை பயன்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.