தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா முடிவு நிராகரித்த பா.ஜ., தலைவர்கள்
தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா முடிவு நிராகரித்த பா.ஜ., தலைவர்கள்
தேவேந்திர பட்னவிஸ் ராஜினாமா முடிவு நிராகரித்த பா.ஜ., தலைவர்கள்
ADDED : ஜூன் 07, 2024 10:23 PM

மும்பை : மஹாராஷ்டிராவில் உள்ள 48 லோக்சபா தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., கூட்டணி 17 இடங்களை கைப்பற்றிய நிலையில், அக்கட்சி ஒன்பது இடங்களை மட்டுமே பெற்றது.
அதிருப்தி வேட்பாளர் உட்பட 31 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது.
அனைவருமே பொறுப்பு
இந்த முடிவு, மஹாராஷ்டிராவை பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
பா.ஜ., தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்திருந்தார்.
கட்சிப் பணியில் கவனம் செலுத்தும் வகையில், ஆட்சிப் பணியில் இருந்து விடுவிக்க கட்சி தலைமைக்கு அவர் கோரிக்கையும் விடுத்தார்.
பட்னவிசின் விருப்பத்தை நிராகரித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 'தோல்விக்கு அனைவருமே பொறுப்பு, இந்த விவகாரத்தில் அவருடன் பேசுகிறேன்' என தெரிவித்தார்.
இந்நிலையில் டில்லி சென்ற தேவேந்திர பட்னவிஸ், பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று பேசினார்.
அப்போது, “மஹாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. ராஜ் தாக்கரேயின் ஆதரவை பெற்றது, சரத் பவார் கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் கட்சேயின் ஆதரவை பெற்றது, பா.ஜ., செயலர் வினோத் தாவ்டே அடிக்கடி வேட்பாளர்களை மாற்றியது போன்றவை தோல்விக்கான காரணம்.
கூடுதல் அதிகாரம்
''சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள எனக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்,” என, பட்னவிஸ் வலியுறுத்தினார். இதை, அமித் ஷா நிராகரித்தார்.
இதற்கிடையே, தேவேந்திர பட்னவிசை சந்தித்த பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், 'சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில் ராஜினாமா செய்தால், அது எதிர்மறையான விளைவுகளை தரும். எனவே, சட்டசபை தேர்தல் வரை துணை முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்' என, வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.