/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஒலக்கூர் ஒன்றியத்தில் தே.மு.தி.க., ஆலோசனைஒலக்கூர் ஒன்றியத்தில் தே.மு.தி.க., ஆலோசனை
ஒலக்கூர் ஒன்றியத்தில் தே.மு.தி.க., ஆலோசனை
ஒலக்கூர் ஒன்றியத்தில் தே.மு.தி.க., ஆலோசனை
ஒலக்கூர் ஒன்றியத்தில் தே.மு.தி.க., ஆலோசனை
ADDED : செப் 20, 2011 09:13 PM
திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
ஒலக்கூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் சரவணன், ஆறுமுகம், டாக்டர் செந்தில்முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பிரபாகரன், முத்துக்கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சசிரேகா, அங்காளம்மாள் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சிமன்ற தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை செயலாளர்கள் வினாயகம், காதர்பாஷா, செஞ்சி சிவா, பேச்சாளர் வைர புரட்சிதாசன் , நெசவாளர் அணி கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை பேசினர். நிகழ்ச்சியில் பா.ம.க., முன்னாள் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், பெரப்பேரி தி.மு.க., பிரமுகர் மேத்தா ஆகியோர் தலைமையில் 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க., வில் இணைந்தனர். ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.