குஜராத் ‛நீட்' தேர்வில் முறைகேடு: 3 பேர் கைது
குஜராத் ‛நீட்' தேர்வில் முறைகேடு: 3 பேர் கைது
குஜராத் ‛நீட்' தேர்வில் முறைகேடு: 3 பேர் கைது
UPDATED : ஜூன் 14, 2024 07:55 PM
ADDED : ஜூன் 14, 2024 07:51 PM

சூரத்: குஜராத்தில் நடந்த ‛‛நீட்'' தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, கடந்த, மே, 5ம் தேதி நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் நடந்தது. இதில், 23 லட்சத்து, 33,297 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை மறுத்தது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் ‛‛நீட்'' தேர்வில் பலவழிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது
இது குறி்த்த விசாரணையில், ‛நீட்‛‛ தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வுத்தாள்களை பதில் எழுதி அனுப்புவதாகக்கூறி ஒவ்வொரு மாணவரிடமும் இருந்து ரூ.10 லட்சம் வரையில் பேரம் பேசி பெற்றதாக தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாகவும் இதில் ரூ. 2 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது தெரியவந்தது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.