பாஜ.,- ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்த முடிவு: கேரளாவில் நடக்கிறது கூட்டம்
பாஜ.,- ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்த முடிவு: கேரளாவில் நடக்கிறது கூட்டம்
பாஜ.,- ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்த முடிவு: கேரளாவில் நடக்கிறது கூட்டம்
ADDED : ஜூன் 14, 2024 06:05 PM

திருவனந்தபுரம்: மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைத்து உள்ள நிலையில் பாஜ.,வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், கேரளாவில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன. ஜூலை 31 முதல் ஆக., 2 வரை நடக்கும் இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜ 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் இருந்து முதல்முறையாக பா.ஜ., சார்பில் சுரேஷ் கோபி 74 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சூர் பூரம் நடக்கும் இந்த நகரில் பாஜ.,வின் வெற்றி பெற்றது முக்கியமானதாக ஆர்எஸ்எஸ் கருதி வருகிறது. கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஏராளமான கிளை அமைப்புகள் உள்ளது. பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது வழக்கம்.
இந்நிலையில், ஜூலை 31 முதல் ஆக., 2 வரை 3 நாட்கள் பாஜ., ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பாலக்காட்டில் நடக்கும் இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.