ADDED : செப் 20, 2011 10:43 PM
புதுச்சேரி : அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை பள்ளி முதல்வர் பானுமதி துவக்கி வைத்தார். துணை முதல்வர் மணிவண்ணன், தலைமையாசிரியர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குப்புசாமி கண்காட்சியைப் பார்வையிட்டார். 300க்கும் மேற்பட்ட காட்சி பொருட்களை சுற்று வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் கண்டுகளித்தனர்.