ADDED : செப் 16, 2011 10:03 PM
திருப்பூர் : திருப்பூர் தகவல் தொழில்நுட்ப சங்கம், கடந்த 2008ல் துவக்கப்பட்டது; 127 கணிப்பொறி விற் பனையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இச்சங்கத்துக்கு இதுவரை அலுவலகம் இல்லாமல் இருந்தது. தற்போது வாடகை கட்டடத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சங்க அலுவலகம் திறப்புவிழா நடந்தது. சங்க தலைவர் சண்முகம் திறந்து வைத்தார். துணை தலைவர் அருண், செயலா ளர் சிவப்பிரகாஷ், பொருளா ளர் ராமுகண்ணன், இணை செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உட் பட பலர் பங்கேற்றனர்.