Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

ADDED : ஜூலை 21, 2011 12:40 AM


Google News

திருப்பூர் :திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.கோவை மற்றும் ஈரோடு மாவட்டங் களில் இருந்து சில பகுதிகளை பிரித்து, கடந்த 2009ல் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளாகியும், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்க இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை. அலுவலகம் அமைப்பதற்கான கட்டடங்கள் கிடைக்காததால், காமராஜ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்குகள், கலெக்டர் அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள கிடங்குகள், தற்போது பல்துறை அரசு அலுவலகங்கள் செயல்படும் இடமாக உள்ளது.மாவட்டத்துக்கு தேவையான அரசு அலுவலகங்கள் அமைக்க இடம் தேடும் பணி முடிவுக்கு வந்துள்ளது. எல்.ஆர்.ஜி., கல்லூரி பின்புறம் கலெக்டர் அலுவலகமும், எஸ்.பி., மற்றும் டி.எப்.ஓ., அலுவலகங்கள், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்கள், ஆயுதப்படை மையம், ஆய்வு மாளிகை, மாவட்ட உயர் அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், நல்லூர், பலவஞ்சி பாளையம் பகுதிகளிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இக்கட்டடங்கள் அமைய உள்ள இடம் குறித்த விவரங்களுடன் அதிகாரிகள் குழு கடந்த வாரம் சென்னை சென்றது. கட்டட வரைபடங்களை ஆய்வு செய்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்டடங்களில் அமைய வேண்டிய சில முக்கிய மான இடங்கள் குறித்தும் சந்தேகம் கேட்டுள்ளனர். அக்குறைகளை களைந்து, புதிய கட்டட வரைபடங்கள் தயாரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் அமையவுள்ள துறை அலுவலகங்கள் மற்றும் உயரதிகாரிகளின் அறைகள் மற்றும் ஆலோசனை கூடங்கள், கூட்ட அரங்குகள் குறித்து கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., சில கருத்துகளை தெரிவித்தனர். அதனடிப்படையில், கலெக்டர் அலுவலகத்துக்கான கட்டட வரைபடம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட இவ்வரைபடங்களுக்கு பதிலாக, கையால் வரையப்பட்ட வரைபடங்களை மாநில அளவிலான

அதிகாரிகள் கேட்டுள்ளனர். எனவே, அதை தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us