Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக சிறைகளில் ரூ.30 கோடி முறைகேடு; முழுமையான விசாரணைக்கு உத்தரவு

தமிழக சிறைகளில் ரூ.30 கோடி முறைகேடு; முழுமையான விசாரணைக்கு உத்தரவு

தமிழக சிறைகளில் ரூ.30 கோடி முறைகேடு; முழுமையான விசாரணைக்கு உத்தரவு

தமிழக சிறைகளில் ரூ.30 கோடி முறைகேடு; முழுமையான விசாரணைக்கு உத்தரவு

UPDATED : மே 11, 2025 06:48 AMADDED : மே 11, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
மதுரை: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு வழங்குவதற்காக வாங்கியஉணவுப்பொருட்களை, கூடுதல் விலைக்கு வாங்கியதாக பில் தயாரித்து கொடுத்து ஆண்டுதோறும் ரூ.30 கோடி வரை முறைகேடு செய்ததை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கண்டுபிடித்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக கொள்முதல் செய்த உணவுப் பொருட்கள், பில் விபரங்கள், நிலுவை தொகை உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை கைதிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்க தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு (டி.என்.பி.எப்.எம்.சி.எப்.) மூலம் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய அனைத்து மத்திய சிறைகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் கைதிகளுக்கு தினமும் உணவுப்பொருட்கள் வழங்க கூடுதல்விலைக்கு வாங்கியதாக கணக்கு காண்பிக்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது உறுதியானது. குறிப்பாக சிறைத்துறையில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்தது டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் டி.என்.பி.எப்.எம்.சி.எப்., குறிப்பிட்ட பொருட்களை மட்டும் சப்ளை செய்தது தெரிந்தது. மற்ற பொருட்களை சிறை நிர்வாகம் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் வாங்கியது. அதற்கான பில்லை டி.என்.பி.எப்.எம்.சி.எப்.க்கு அனுப்பினால் அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் விலையை நிர்ணயித்து அரசுக்கு அனுப்பி தொகையை பெற்றனர். இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதை கண்டுபிடித்த டி.ஜி.பி., பழைய முறைபடிகூட்டுறவு பதிவாளரால் நிர்வகிக்கப்படும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்க உத்தரவிட்டார். இதுகுறித்து தினமலர் நாளிதழ் மே 6ம் தேதி செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கடந்த 4 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், அதன் விலை,டி.என்.பி.எப்.எம்.சி.எப்., தந்த பில், சிறை நிர்வாகம் தரவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்த நடவடிக்கையால் டி.என்.பி.எப்.எம்.சி.எப்.,க்கு நிலுவைத் தொகையை முழுமையாக தராமல் சந்தை விலையை கணக்கிட்டு தர வாய்ப்புள்ளது. தணிக்கை துறை மூலம் உரிய விபரங்களை பெற்றுடி.என்.பி.எப்.எம்.சி.எப்.,க்கு விளக்கம் கேட்கப்படும்'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us