/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரை விழாவில் இன்று எதிர்சேவை மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரை விழாவில் இன்று எதிர்சேவை
மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரை விழாவில் இன்று எதிர்சேவை
மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரை விழாவில் இன்று எதிர்சேவை
மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரை விழாவில் இன்று எதிர்சேவை
ADDED : மே 11, 2025 06:26 AM
மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று இரவு வீர அழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும், வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் விழா நாளை நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா மே 8ம் தேதி காலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சிக்காக வீர அழகர் இன்று இரவு 10:00 மணிக்கு வேல் கம்பு, வாள், வளரி ஏந்தி கள்ளழகர் வேடம் பூண்டு எதிர் சேவை நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
வைகை ஆற்றில் வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் இறங்கும்விழா நாளை 12ம் தேதி காலை 6:00 மணியிலிருந்து 6:48 மணிக்குள் நடைபெற உள்ளது.