ADDED : ஆக 23, 2011 11:52 PM
மயிலம் : திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் வைகுண்ட நாராயண பெருமாள் கோவிலில்
உறியடித் திருவிழா நடந்தது.
ஒமந்தூர் ஏரிக்கரை அருகே உள்ள வைகுண்ட நாராயண
பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையெட்டி கடந்த 21ம் தேதி சிறப்பு
பூஜைகள் நடந்தது. மறுநாள் (22ம் தேதி) புதியதாக பஞ்சலேகத்தினால்
செய்யப்பட்ட பெருமாள் சிலைக்கு சிறப்பு யாகம் செய்தனர். மாலை 6,30 மணிக்கு
கோவில் வளாகத்தில் உறியடித் திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்
பத்திரி நாராயணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.