/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டிதிருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டி
திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டி
திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டி
திருக்கோவிலூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.,-தி.மு.க., கடும் போட்டி
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்து வைத்துக் கொண்டிருந்த காங்., சட்டசபை தேர்தலில் தோற்றாலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற போராடும். இதற்கான தகுதியான வேட்பாளரை களமிறக்க காங்., தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில் அ.தி.மு.க., தி.மு. க.,விற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்., வேட்பாளர் இருப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க.,வை பொறுத்தவரை தனித்து களம் காண்பதால் வேட்பாளரை தேடிப்பிடித்து அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. பேரூராட்சி தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சியினர் வரிந்து கட்டி களமிறங்கியுள்ள நிலையில் மற்ற கட்சிகள் தேர்தலில் கரையேறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.