Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு தந்தி அனுப்புங்கள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு தந்தி அனுப்புங்கள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு தந்தி அனுப்புங்கள்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு தந்தி அனுப்புங்கள்

ADDED : ஆக 17, 2011 10:55 AM


Google News

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசார‌ே தீவிரம் காட்டி வருகிறார்.

வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் தமது கொள்கையில் சற்றும் தளராமல் போராடி வருகிறார். அவருடைய இந்த அறப்போராட்த்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் தாங்களாகவே முன்வந்து பல போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.



இந்த அறப் போராட்டத்தில் தினமலர் வாசகர்களும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த விஷயத்தில் சுப்ரீம் ‌கோர்ட் உடனடியாக தலையிட்டு, அன்னா ஹசாரே, திட்டமிட்டபடி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதிக்க வேண்டும்; வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தினமலர் வாசகர்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு தந்திகள் அனுப்பி, அன்னா ஹசாரே நடத்தும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us