/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவி விட்டார்இந்திரா நகர் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவி விட்டார்
இந்திரா நகர் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவி விட்டார்
இந்திரா நகர் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவி விட்டார்
இந்திரா நகர் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவி விட்டார்
ADDED : அக் 05, 2011 01:22 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவி விட்டார் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் பேசினார்.இந்திரா நகர் தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிடும் ஆறுமுகத்தை ஆதரித்து நேற்று சாணரப்பேட்டை பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:கடந்த முறை இந்தத் தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றார். வெற்றி பெற்றும், இந்தத் தொகுதியை ஒதுக்கி விட்டு பக்கத்து தொகுதியைத் தேர்வு செய்து கொண்டார். ரங்கசாமியை 16 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தொகுதி இது. இப்பகுதி வளர்ச்சி பெறும், பயன்பெறலாம் என்ற எண்ணத்தில் மக்கள் ஓட்டு போட்டனர்.இந்தத் தொகுதி மக்களைக் கேட்காமல் கதிர்காமம் தொகுதிக்குச் சென்று விட்டார். இப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மின்சாரம், குடிநீர், சுடுகாட்டு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பட்டா வழங்கப்பட வில்லை.நூலக கட்டடம் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்பட வில்லை. டோபிகானா கோட்ரஸ் யாருக்கும் வழங்கப்பட வில்லை. இதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. மருத்துவக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கி நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தப் பகுதியில் இதுவரை யாருக்கும் டோக்கன் வழங்கப்பட்டதா. இல்லை. இந்தத் தொகுதி மக்களை ரங்கசாமி கைகழுவிட்டார். ஆறுமுகத்தை தேர்வு செய்யுங்கள். க õங்., வேட்பாளர் கூப்பிடுவதற்கு முன்பே வந்து உதவிகளை செய்பவர். காங்., வேட்பாளர் கடந்த முறை தோல்வியடைந்தும், இந்த முறை மனம் சுளிக்காமல் மீண்டும் வந்து ஓட்டு கேட்கிறார். ஓட்டுக்காக எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்கள் பணம். கொள்ளையடித்த பணத்தில் கிள்ளி கொடுக்கின்றனர். அதை வாங்கிக்கொண்டு காங்., வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


