அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் அலெர்ட்
அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் அலெர்ட்
அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் அலெர்ட்
ADDED : செப் 19, 2025 10:03 AM

சென்னை: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. செப் 23ம் தேதி வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
செப் 26ம் தேதி வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் செப் 19,21 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.