மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை; ஆபரணத் தங்கம் பவுன் ரூ.81,840க்கு விற்பனை
மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை; ஆபரணத் தங்கம் பவுன் ரூ.81,840க்கு விற்பனை
மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை; ஆபரணத் தங்கம் பவுன் ரூ.81,840க்கு விற்பனை
ADDED : செப் 19, 2025 09:46 AM

சென்னை: ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.81,840க்கு விற்பனையாகி வருகிறது.
உலகின் பல நாடுகள், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டு விற்பனையாகி வந்தது.
கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. தமிழகத்தில் நேற்று (செப்., 18) தங்கம் விலை பவுனுக்கு 400 ரூபாய் சரிந்து, 82,760 ரூபாய்க்கு விற்பனையாகியது.
இந்நிலையில் இன்று (செப்., 19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,230க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ரூ.143க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் உயர்ந்திருப்பது நகை ஆபரண பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.