கண்மாய்களின் நிலை விபரம் சேகரிப்பு
கண்மாய்களின் நிலை விபரம் சேகரிப்பு
கண்மாய்களின் நிலை விபரம் சேகரிப்பு
ADDED : ஆக 22, 2011 12:27 AM
கம்பம் : கண்மாய்கள், குளங்கள், நீர் நிலைகள் பற்றிய விபரங்களை சேகரித்து
அனுப்ப, பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை
ஆவணங்களில் உள்ள கண்மாய்கள், அவற்றின் கொள்ளளவு, கண்மாயின் தற்போதைய நிலை,
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா, ஆக்கிரமிப்பாளர்களின் விபரம், தூர் வார
வாய்ப்புள்ளதா, நீர் பெருக்கினால் பாசன வசதி பெறும் விபரம் போன்றவை
கேட்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில்
உள்ள சிறு கண்மாய் பற்றிய விபரங்களையும் சேகரித்து அனுப்புமாறு
கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, மாநில அரசு தீவிரம்
காட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கண்மாய்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டு,
கூடுதல் நீர் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை அகற்றப்பட்டு, கண்மாய்கள்
கையகப்படுத்தப்படும்' என,பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.