மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்: இ.பி.எஸ்., அறிவிப்பு
மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்: இ.பி.எஸ்., அறிவிப்பு
மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்: இ.பி.எஸ்., அறிவிப்பு

சேலம்: 'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சேலத்தில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கலந்து கொள்ளும். அ.தி.மு.க., சார்பில் இருவர் பங்கேற்று கருத்துக்களை அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிப்போம். கூட்டத்தை அதற்கு தான் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அங்க தான் பேச முடியும்.
கூட்டத்தில் எங்களது நிலைப்பாடை தெளிவாக எடுத்துரைப்போம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.,தான். வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. மக்கள் கொடுத்த அங்கீகாரம் அ.தி.மு.க.,வுக்கு தான். பிரதான எதிர்க்கட்சி தான் மக்களின் பிரச்னையை எடுத்து சொல்லும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.