/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
ADDED : செப் 17, 2011 01:22 AM
தர்மபுரி: ஆசிரியர்கள் இட மாறுதலுக்கான கவுன்சலிங் நடக்கும் நாளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பில் நடப்பதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 19, 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய மூன்று நாட்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளதால், ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு நேற்று மாவட்டத்திலுள்ள 75 சதவீதம் ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பணி இடம் மாறுதலுக்கான கவுன்சலிங் 19ம் தேதி நடக்கிறது. அதே தேதியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கமாறு உத்தரவு அனுப்பபட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து முதுநிலை ஆசிரியர் ஒருவர் கூறியது: உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு 19ம் தேதி துவங்குகிறது. ஆனால், அதே தேதியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணி இட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. மேலும், அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை நாளிலும் பயிற்சி வகுப்புகள் வைத்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதத்தில் இரு சனிக்கிழமை வேலை செய்ய வேண்டும். காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்கள் குறைப்பு மற்றும் தினம் கூடுதலாக 45 நிமிடங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு நிர்பந்தங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, கவுன்சலிங் நடக்கும் நாளில் பயிற்சி வகுப்புகள் வைத்துள்ளது தங்களை பழிவாங்குவது போல உள்ளது. இவ்வாறு கூறினார்.