Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்; ஈரான் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்; ஈரான் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்; ஈரான் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்; ஈரான் அறிவிப்பால் பதற்றம்

UPDATED : ஆக 01, 2024 02:27 PMADDED : ஆக 01, 2024 11:59 AM


Google News
Latest Tamil News
தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிக்கு பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் அரசு உத்தரவு; இதனால் உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதுவரை 39 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டார்.

நேரடி தாக்குதல்

இந்த படுகொலைக்கு பழிக்குப் பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். அவர்,'' இஸ்மாயில் ஹனியே எங்களுடைய விருந்தாளி. அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இஸ்ரேலை பழிவாங்குவதை நாங்கள் எங்கள் கடமையாகக் கருதுகிறோம் என்றார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழப்புக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இஸ்ரேல் மவுனம் காத்து வருகிறது. ஈரான் நேரடி தாக்குதலில் ஈடுபடும் என்ற அச்சத்தால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us