கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பரா: டிரம்ப் சர்ச்சை பேச்சு
கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பரா: டிரம்ப் சர்ச்சை பேச்சு
கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பரா: டிரம்ப் சர்ச்சை பேச்சு
ADDED : ஆக 01, 2024 11:24 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்க உள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா, கறுப்பரா என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. சிகாகோவில் நடந்த மாநாட்டில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், '' கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். தற்போது அவர் தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருகிறார். இதனால், அவர் இந்தியரா? கறுப்பரா? என்பது தெரியவில்லை. தற்போது கமலா ஹாரிஸ் வெளிப்படையாக இல்லை'' எனக் குறிப்பிட்டார்.
கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப் பேசியதற்கு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. அது அவரது சொந்த முடிவு. கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும். கமலா ஹாரிஸ் துணை அதிபர் என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து இருக்க வேண்டும் என்றார்.
கமலா ஹாரிஸ் யார்?
ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவில் பிறந்த அவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2016ல் செனட் சபையின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ல் அதிபர் தேர்தலின் போது, ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை அறிவித்தார். கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.