2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
2012ல் சிவகங்கை மருத்துவகல்லூரியை துவக்க திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சிவகங்கை:அடுத்த கல்வியாண்டில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்காக, விரைவில் கட்டுமானப் பணிகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார்.சிவகங்கையில், 97 கோடி ரூபாயில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நடக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை நேற்று பார்வையிட்டார். பொதுப்பணி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது:இக்கல்லூரியை திறக்க ஆய்வு செய்து, அனுமதி வழங்குமாறு, இந்திய மருத்துவக் கழகத்திற்கு, ஆகஸ்ட்டில் கடிதம் எழுத உள்ளோம். அவர்கள், 2012 ஜனவரியில் வரக்கூடும்.எனவே, கல்லூரி செயல்பட தேவையான கட்டுமானப் பணியை நவம்பருக்குள் முடிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில், தமிழகத்தில் திறப்பதற்கு கல்லூரி இல்லை. எனவே, சிவகங்கையில் தான் திறக்க வேண்டும். அதற்காக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு விஜய் தெரிவித்தார்.மருத்துவக் கல்வி இயக்குனர் வம்ச தாரா, சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.