ADDED : ஜூலை 24, 2011 03:26 PM
புதுடில்லி : நிதித்துறையில் இங்கிலாந்துடன் உறவை மேம்படுத்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி லண்டன் சென்றுள்ளார்.
அவருடன் பொருளாதார தலைமை ஆலோசகர் கவுசிக் பாசு, செபி தலைவர் யு கே சின்ஹா ஆகியோர் உடன் சென்றுள்ளனர். லண்டனில் பிரணாப் தலைமையிலான குழுவினர் இங்கிலாந்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ஜி-20, ஐ.எம்.எப்., ஆகியவற்றை பலப்படுத்துவது, சர்வதேச பொருளாதார பிரச்னைகள், இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.