இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு

துல்லிய தாக்குதல்
தொடர்ந்து ஏகே பாரதி கூறியதாவது: பஹவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக வெடிமருந்துகள் மூலம் துல்லியமாக தாக்கப்பட்டது. 9 - 10 ஆகிய நாட்களில் பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் நமது எல்லைக்குள் வந்தன. அவற்றால், நமது ராணுவ கட்டமைப்புகளை தாக்க முடியவில்லை.
தயார் நிலையில்
கடந்த 9 ம் தேதி இரவு 10:30 மணியளவில், நமது நகரங்களில் ஏராளமான ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறந்தன. தரையிலும், எதிரிகள் நிர்ணயித்த இலக்குகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக வான் பாதுகாப்பு கவசம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஜம்மு, உதம்பூர், பதன்கோட், அமிர்தசரஸ், ஜெய்சால்மர், டல்ஹவுசி ஆகிய நகரங்களில் இந்த ட்ரோன்கள் பறந்தன. அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
கேடயம்
காலை வரை ட்ரோன் தாக்குதல் தொடர்ந்தது. லாகூர் அருகே இருந்து ட்ரோன்களை ஏவிய போதும், பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை பறக்க பயணித்தது. தங்கள் நாட்டு விமானத்தை மட்டும் அல்லாமல் சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி அளித்தது. பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது பாக்.,. ஆனாலும் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது. நமது வான் பாதுகாப்பு அமைப்பு எந்த அச்சுறுத்தலையும் சமாளித்ததுடன், ராணுவ அமைப்புகள் மற்றும் சிவிலியன் மணடலங்களை பாதுகாத்தது. இந்தியா கட்டுப்பாட்டுடன் தாக்குதல் நடத்தியது.
திறமை உள்ளது
ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்தால் அதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். சக்லாலா, ரபிக்கி, ரஹீம்யார் கான் விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தி, அத்துமீறலை பொறுத்து கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியை அனுப்பினோம். இதனைத் தொடர்ந்து சர்கோடா, புலாரி மற்றும் ஜகோபாபாத்திலும் தாக்குதல் நடத்தினேம். எந்ததளத்திலும் எந்த அமைப்பையும் தாக்கும் திறன் நம்மிடம் உள்ளது. பயங்கரவாத கட்டமைப்புகள் மட்டுமே நமது இலக்கு. துல்லியமாக தாக்குதல் நடத்தி இதனை நிறைவேற்றினோம்.
பயங்கரவாதிகள் மட்டுமே குறி
ஆனால், 7 ம் தேதி பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்களை அனுப்பியது. அவை பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 மட்டும் தாக்கினாலும், சிறிய அளவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் பயங்கரவாதிகள் மீது மட்டும் தான் குறி வைத்தோம். ஆனால், பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தது.
மோசம்
கடற்படை வைஸ் அட்மிரல் ஏன் பிரமோத் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, கடற்படை, தனது அமைபபுகளை அரபிக்கடலில் நிறுத்தியது. இந்தியாவின் பாதுகாப்பு படைக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான தயாராக இருந்தோம். அரபிக்கடலில் கடற்படை விழிப்போடு இருந்தது. தொடர் கண்காணிப்பில் இந்திய கடற்படை எதிரிக்கு கடுமையான இழப்பு ஏற்படுத்தும் வலிமை நமது கடற்படைக்கு உண்டு. மீண்டும் தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும். கராச்சியை நோக்கி இந்திய கடற்படை தயார் நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.