புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை : தேர்தல் கமிஷன் அறிவிப்பு
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை : தேர்தல் கமிஷன் அறிவிப்பு
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை : தேர்தல் கமிஷன் அறிவிப்பு
ADDED : அக் 06, 2011 10:07 PM

சென்னை : உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் ஓட்டுப் பதிவின் போது ஓட்டுச் சாவடிக்கும், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கும் வரும் ஏஜன்ட்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் ஓட்டுப் பதிவின் போது ஓட்டுச்சாவடிக்கும், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் அனுமதிக்கப்படுவர்.
இவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் அனுமதி தர வேண்டும் என்று, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


