வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
மத்திய கிழக்கு அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் செப் 25ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.