/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேராசிரியர் இளங்கோவன் நூலுக்கு பரிசுபேராசிரியர் இளங்கோவன் நூலுக்கு பரிசு
பேராசிரியர் இளங்கோவன் நூலுக்கு பரிசு
பேராசிரியர் இளங்கோவன் நூலுக்கு பரிசு
பேராசிரியர் இளங்கோவன் நூலுக்கு பரிசு
ADDED : ஜூலை 27, 2011 01:30 AM
புதுச்சேரி : புதுச்சேரி பேராசிரியர் இளங்கோவனின் 'இணையம் கற்போம்' நூல், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கியப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான மாநில இலக்கியப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் எழுதிய 'இணையம் கற்போம்' நூல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இளங்கோவனுக்கு பரிசுத் தொகையும் சான்றிதழும், சென்னை எம்.ஜி.ஆர். நகர் அசோகா திருமண நிலையத்தில் வரும் 31ம் தேதி நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கு எழுத்தாளர் அருணன் தலைமை தாங்குகிறார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றுகிறார். வக்கீல் செந்தில்நாதன் வாழ்த்திப் பேசுகிறார்.