Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/" உலகம் முழுவதும் பெருமை தரும் இந்திய கலாசாரம்: பிரதமர் மோடி

" உலகம் முழுவதும் பெருமை தரும் இந்திய கலாசாரம்: பிரதமர் மோடி

" உலகம் முழுவதும் பெருமை தரும் இந்திய கலாசாரம்: பிரதமர் மோடி

" உலகம் முழுவதும் பெருமை தரும் இந்திய கலாசாரம்: பிரதமர் மோடி

UPDATED : ஜூன் 30, 2024 01:06 PMADDED : ஜூன் 30, 2024 01:02 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‛‛ நமது கலாசாரம் உலகம் முழுவதும் பெருமை பெற்று வருகிறது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: Image 1287554அடுத்த மாதம் பாரீஸ் ஒலிம்பிக் துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். விரைவில் அவர்களை சந்திக்க உள்ளேன். உங்கள் சார்பில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பேன்.

குவைத்தில் ஹிந்தி


Image 1287555குவைத் நாட்டு தேசிய ரேடியோவில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம், நமது கலாசாரம் குறித்த நிகழ்ச்சி ஹிந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நமது திரைப்படங்கள், கலை ஆகியவை அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரபலம். இதன் மீது அந்நாட்டு மக்களும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். இதனை முன்னெடுத்த குவைத் அரசுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

துர்க்மெனிஸ்தானில் ரவிந்திரநாத் தாகூர் சிலை

Image 1287556

நம் கலாச்சாரம் இன்று உலகம் முழுவதும் பெருமை பெற்று வருவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். துர்க்மெனிஸ்தானில், அந்நாட்டு தேசிய கவிஞரின் 300வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் உலகில் தலைசிறந்த 24 கவிஞர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதில் ரவிந்திரநாத் தாகூரின் சிலையும் ஒன்று.

கரீபிய நாடுகள்


இந்த மாதம், சூரினாம், செயின் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய நாடுகள் இந்திய பாரம்பரியத்தை முழு உற்சாகத்துடன் கொண்டாடின. சூரினாமில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், ஜூன்5 ம் தேதியை இந்திய வருகை தினமாக அனுசரித்தனர். அங்கு போஜ்பூரி, ஹிந்தி மொழி ஆகியவை பரவலாக பேசப்படுகின்றன. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் நமது பாரம்பரியத்தை பெருமையாக நினைக்கின்றனர்.

யோகா தினம்

Image 1287557இந்த மாதம் 10வது யோகா தினத்தை உலக நாடுகள் முழு உற்சாகத்துடன் கொண்டாடின. சவுதி அரேபியாவில் அல் ஹனாப் சாத் என்ற பெண் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. சவுதி பெண் ஒருவர் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியது இது முதல்முறை. நைல் நதிக்கரையோரம், செங்கடல் பகுதி பிரமீடு அருகே லட்சக்கணக்கான மக்கள் யோகாவில் ஈடுபட்டனர். இலங்கை, அமெரிக்கா, பூடான், நாடுகளிலும் யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us