Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

நந்தன்தட்டை சாரல் குளத்தை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 24, 2011 01:34 AM


Google News

முக்கூடல் : நந்தன்தட்டை சாரல்குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாப்பாக்குடி யூனியன் நந்தன்தட்டை கிராமத்தில் உள்ளது சாரல்குளம்.

இக்குளத்தின் தண்ணீர் மூலம் சுமார் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆரம்பத்தில் 12 அடியாக இக்குளம் ஆங்கிலேயர் காலத்தில் வெட்டப்பட்டது. கடனா அணைக்கட்டு பாசனத்தின் காங்கேயன் கால்வாயில் 10ம் எண் மடை மூலம் இதில் தண்ணீர் பெருக்கப்படுகிறது. நான்கு பெரிய மடைகள் வழியாக தண்ணீர் வயல்களுக்கு வழங்கப்படுகிறது.தற்போது இக்குளம் சுமார் 60 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் மலை பூவரசு, அமலை செடிகள் அதிகம் வளர்ந்து குளம் மண் மேடாகி உள்ளது. எனவே தண்ணீர் அதிகமாக பெருக்க முடியவில்லை. மடை வழியாக தண்ணீர் வழங்க முடியவில்லை. 12 அடி ஆழமாக இருந்த குளம் 6 அடி ஆழமாக மாறிவிட்டது.



மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இக்குளத்தில் தான் சேருகிறது.ஆழம் அதிகமாக இல்லாததால் அந்த தண்ணீர் முழுவதும் வீணாகி கருணையாற்றில் சென்றுவிடுகிறது. இங்குள்ள விவசாயிகள் பலமுறை குளத்தை ஆழப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 2005ம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் குளத்தை ஆய்வு செய்து சுமார் ரூ.2.40 கோடியில் மதிப்பீடுகள் தயாரித்து உலக வங்கி உதவி திட்ட அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே விவசாயிகள் மீண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். வரும் மழைக்காலத்திற்கு முன் சாரல் குளம் தூர்வாவாரப்பட்டு ஆழப்படுத்தி தண்ணீர் நிரப்பி இரண்டு மகசூல் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us