சங்கராபுரம் :சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜை, வாஸ்து பூஜைகள் நடந்தன. நேற்று காலை கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. பின்னர் பாண்டலம் ரவி குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கோவில் தர்மகர்த்தா ராமச்சந்திர நாயுடு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.