"2ஜி' ஊழல் குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி.,யின் பதவிக்காலம் நீட்டிப்பு
"2ஜி' ஊழல் குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி.,யின் பதவிக்காலம் நீட்டிப்பு
"2ஜி' ஊழல் குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி.,யின் பதவிக்காலம் நீட்டிப்பு
ADDED : செப் 06, 2011 11:43 PM

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.,) பதவிக் காலம், அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த பார்லிமென்ட் கூட்டுக் குழுவை கடந்த மார்ச் 4ம் தேதி மத்திய அரசு அமைத்தது. இக்குழுவில், லோக்சபாவில் இருந்து, 20 பேரும், ராஜ்யசபாவில் இருந்து, 10 பேரும் இடம்பெற்றனர். குழுவின் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டார். இக்குழு, ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இம்மாதம் 8ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், தங்களால் விசாரணை நடத்தமுடியவில்லை. எனவே, இதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என, குழுவின் தலைவர் சாக்கோ, லோக்சபாவில் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். அறிக்கை அளிக்கும் காலத் தை அடுத்தாண்டு பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.