வயநாடு நிலச்சரிவு : ரூ. 5 கோடி தமிழக அரசு நிவாரணம்
வயநாடு நிலச்சரிவு : ரூ. 5 கோடி தமிழக அரசு நிவாரணம்
வயநாடு நிலச்சரிவு : ரூ. 5 கோடி தமிழக அரசு நிவாரணம்
ADDED : ஜூலை 30, 2024 07:05 PM

சென்னை: கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் மீட்புமற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 5 கோடி நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். நடந்த சம்பவ குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் ஸ்டாலின் தொலை பேசி வாயிலாக பேசினார்.
இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக அரசு சார்பில் தெரிவித்துக்கொண்டும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 கோடி வழங்கிட, இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.