Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திறந்தவெளியில் இறைச்சி, மீன் விற்பனை நல்லூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

திறந்தவெளியில் இறைச்சி, மீன் விற்பனை நல்லூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

திறந்தவெளியில் இறைச்சி, மீன் விற்பனை நல்லூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

திறந்தவெளியில் இறைச்சி, மீன் விற்பனை நல்லூரில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

ADDED : ஆக 22, 2011 11:25 PM


Google News

திருப்பூர் : திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி, மீன் விற்பனை செய்வது நல்லூரில் அதிகரித்து வருகிறது.

விற்பனை முடிந்ததும், கழிவுகளை ரோட்டோரத்தில் வீசி எறிவதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமும் பாதிக்கிறது. நல்லூர் நகர பகுதிகளில் நூற்றுக்கணக்கான இறைச்சி, மீன் கடைகள் செயல்படுகின்றன. கடை அமைத்தும், தள்ளுவண்டிகளிலும் மீன், இறைச்சி விற்பனை செய்வோர் பெரும்பாலும் சுகாதாரத்தை பின்பற்றுவது இல்லை. காங்கயம் ரோடு பகுதி, ராக்கியாபாளையம், ஜெய்நகர், எம்.பி., நகர், சந்திராபுரம், விஜயாபுரம் என நல்லூர் பகுதி முழுவதும் சுகாதாரமற்ற முறையிலேயே மீன், இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. கொசுக்கள், ஈ மொய்க்கும் வகையில் திறந்தவெளியில் வைத்தே விற்பனை செய்கின்றனர். வேறு வழியின்றி அவற்றை வாங்கி உண்ணும் பொதுமக்கள், உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். நகர் பகுதிகளில் மீன், இறைச்சி விற்பனை செய்வோர், விற்பனை முடிந்ததும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. மீன் செதில்கள், கோழிக்கழிவுகளை சாக்கடைகளிலும், ரோட்டிலும் வீசி எறிகின்றனர்; மாமிச கழிவுகளின் தேக்கத்தால் சாக்கடையில் கழிவு தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, குடியிருப்பு பகுதி சுகாதாரம் பாதிக்கிறது.மழை காலங்களில், மழைநீருடன் இறைச்சி கழிவுகளும் அடித்து வரப்படுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆங்காங்கே கிடக்கும் எலும்புகளை உண்பதற்காக சுற்றித்திரியும் நாய்களால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது; திடீரென வாகனங்களின் குறுக்கே வந்து விழும் நாய்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழ வேண்டியுள்ளது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி, மீன் விற்பனை செய்வோரை கண்டறிந்து, நல்லூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் மற்றும் நகர சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அசைவ உணவு விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us