ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்
ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்
ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், 3வது நாளான இன்று (ஜூன் 29) அதிகாலை 4:30 மணியளவில் ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 50 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக புரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்கள் பிரபாதி தாஸ் மற்றும் பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் பிரேமகாந்த் மஹந்தி என்ற 70 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரத யாத்திரையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.