/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிரதான சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்பிரதான சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்
பிரதான சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்
பிரதான சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்
பிரதான சாலையில் தி.மு.க., பொதுக்கூட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம்
ADDED : ஆக 26, 2011 12:21 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது தொடர்கிறது.
விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 9 பேர் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில் தி.மு.க., வினர் செய்து வருகின்றனர்.இந்த கூட்டத்திற்கு இட வசதியே இல்லாத சாலையான ரங்கநாதன் ரோட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியான இந்த சாலையில் பொதுக் கூட்ட மேடை அமைக் கப்பட்டால் சிமென்ட் சாலை சேதப்படுத்தப்படுவதோடு, அதிகளவில் கூட்டம் குவிந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஸ்டாலின் உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் பங்கேற்பதால் தொண்டர்கள் வாகனங்களில் குவியும் நிலை உள் ளது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ரங்கநாதன் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை. இதனால் கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் திருச்சி நெடுஞ்சாலையிலும், பாண்டி ரோட்டிலும் நிறுத்தி வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நெருக்கடியான நிலையைப் போக்க நகராட்சி மைதானம் அல்லது புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்பு திடல், கலைஞர் அறிவாலயம் எதிர்புறத்தில் பொதுக்கூட்டத்திற்கான இடத்தினை வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு, பழைய பஸ் நிலையம், ரயில் நிலையப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளிலேயே அரசியல் கட்சியினர்களின் ஆர்ப்பாட்டத்திற்கும், பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. இதே போல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் கே.கே. ரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு இடம் ஒதுக்கியதை சுட்டிக்காட்டி பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தமிழகத்தில் சாலைகளை ஆக்கிரமித்து பொதுக் கூட்டங்கள் நடத்த கோர்ட் தடை விதித்தது குறிப்பிடத் தக்கது. முன் உதாரணமாக இருந்த விழுப்புரத்தில், மீண்டும் குடியிருப்புகள் மிகுந்த சாலையில் பொதுக் கூட்டத்திற்கு அனுமதிப்பது கோர்ட் தடையை மீறும் செயலாக அமையும் என்பதை போலீசார் கவனத்தில் கொள்ள வேண்டும்.