முடிவுக்கு வருகிறது ஹசாரே போராட்டம்?
முடிவுக்கு வருகிறது ஹசாரே போராட்டம்?
முடிவுக்கு வருகிறது ஹசாரே போராட்டம்?
ADDED : ஆக 25, 2011 07:48 PM
புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் நிபந்தனைகள் அரசால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், 10 நாட்களாக நீடித்த ஹசாரேவின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னா ஹசாரே, அரசு உறுதியை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், அதற்கு அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹசாரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதே, ஹசாரே 240 மணி நேரத்திற்கு மேல் இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் வெற்றி என்றே அனைவரும் கருதுகின்றனர்.