Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/எடைப் பிரச்னைகளை தீர்க்க வெளிப்படையான நடவடிக்கைத் தேவை :கரும்பு விவசாயிகள் கோரிக்கை

எடைப் பிரச்னைகளை தீர்க்க வெளிப்படையான நடவடிக்கைத் தேவை :கரும்பு விவசாயிகள் கோரிக்கை

எடைப் பிரச்னைகளை தீர்க்க வெளிப்படையான நடவடிக்கைத் தேவை :கரும்பு விவசாயிகள் கோரிக்கை

எடைப் பிரச்னைகளை தீர்க்க வெளிப்படையான நடவடிக்கைத் தேவை :கரும்பு விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஆக 11, 2011 11:08 PM


Google News

விழுப்புரம் : ஆலை நிர்வாகத்தினர் கரும்புவெட்டும் இயந்திரங்களை வாங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் மணிமேகலை தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள், கோரிக்கைகளை முன் வைத்து பேசியதாவது: ராதாகிருஷ்ணன்: விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 11 ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி அனுப்புகிறோம். விவசாயிகளுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும். உரங்கள், வெட்டு கூலி செலவினங்கள் உயர்ந்துள்ளதால் டன் ஒன்றுக்கு 3000 ரூபாய் விலை வழங்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைப் பதிவிலிருந்து திடீரென தனியார் ஆலைக்கு மாற்றக் கூடாது. விவசாயிகள் விருப்பத்தின் படியே மாற்ற வேண்டும். எடைப் பிரச்னையைபோக்க விவசாயிகளுக்கு வெளிப்படையான எடை முறையை செயல்படுத்த வேண்டும்.

பாண்டியன்: வெட்டு கூலி பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆலை நிர்வாகம் விலையை நிர்ணயித்து கொடுக்க வேண்டும்.

வெங்கடரெட்டி: செஞ்சி பகுதியில் சாலைகளைக் குறுக்கிட்டு மின்சார ஒயர்கள் தாழ்வாக இருப்பதால் கரும்பு ஏற்றிச் செல்வதில் அறுபட்டு, பிரச்னை எழுகிறது. தாழ்வாக உள்ள மின்சார வயர்களை உயர்த்திட வேண்டும். மற்ற மாவட்டங்களில் உள்ளதைப் போல் ஆலை நிர்வாகங்கள் கரும்பு வெட்டும் இயந்திரங்களை வாங்க வேண்டும்.

ராஜா: கரும்புக்கு ஆட்கள் தேவை அதிகமுள்ளது, 100 நாள் வேலை திட்டத்தால் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. விவசாயப் பணிகள் இல்லாத நேரத்தில் 100 நாள் திட்டப் பணிகளை செய்ய வேண்டும்.

சீனுவாசன்: சர்க்கரை ஆலைக் கழிவுகள் ஆறு, நிலங்களில் பாய்ந்து விவசாயம் பாதிக்கிறது. இதனை சுத்திகரித்து வெளியே அனுப்பிட நடவடிக்கை வேண்டும்.

லிங்கராமன்: சர்க்கரை விலை உயர்ந்துள்ள அளவில் கரும்புக்கான விலை உயர்த்தப்படவில்லை. உரிய விலை வழங்க வேண்டும்.

ஜெயச்சந்திரன்: கரும்பில் குருத்துப்பூச்சி தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். மின் சிக்கனத்திற்கு சொட்டு நீர் பாசன சாதனங்களை முழு மானியத்தில் வழங்க வேண்டும்.

ஏழுமலை: விழுப்புரம் மட்டுமின்றி கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்ட ஆலைகளுக்கும் கரும்பு அனுப்பப்படுகிறது, கரும்பு பதிவிற்கான ஆலை எல்லை விபரங்களை அறிவிக்க வேண்டும். இலவச இன்சூரன்சு திட்டத்தை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பல கோரிக்கைகளை வைத்தனர். கோரிக்கைள் அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் மணிமேகலை தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us