ADDED : செப் 06, 2011 12:56 AM
வருஷநாடு :வருஷநாடு,மேகமலை வனப்பகுதிகள், வனச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு,மேகமலை, கண்டமனூர் வனச்சரகங்கள் உள்ளன. இதில் கண்டமனூர்,வருஷநாடு,மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சில மலைப் பகுதிகளை வனச்சரணாலயமாக ஆக்குவதற்கு மத்திய வன அமைச்சகத்திற்கு மாநில வனத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர் .தற்போது இந்த வனப்பகுதிகளில் காந்திக்கிராமம்,பொம்முராஜபுரம்,அரசரடி,இந்திராநகர்,மஞ்சனூத்து உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள்,பாலிதீன் பைகள் ,தீப்பெட்டி எடுத்து செல்லவோ, சமையல் செய்ய பொருட்களை கொண்டு செல்லவும், வனத்துறை தடை விதித்துள்ளது.