சிறை ஆபரேஷன் வெற்றி: சந்தோஷத்தில் செந்தில்பாலாஜி
சிறை ஆபரேஷன் வெற்றி: சந்தோஷத்தில் செந்தில்பாலாஜி
சிறை ஆபரேஷன் வெற்றி: சந்தோஷத்தில் செந்தில்பாலாஜி
ADDED : ஜூன் 05, 2024 04:05 AM

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் வேலை பார்ப்பதில் கில்லாடி என்பதை, ஈரோட்டில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலின் போது நிரூபித்தார்.
இதனால், நடந்த முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளை அவரிடம் ஒப்படைக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனாலும், அவரிடம் இருந்து தேர்தல் தொடர்பான ஆலோசனை பெற்ற தி.மு.க., தலைமை, அவருடைய தீவிர ஆதரவாளரான கணபதி ராஜ்குமாரை கோவை லோக்சபா தொகுதிக்கான வேட்பாளராக்கியது. அண்ணாமலையை வீழ்த்த அவரே சரியானவர் என அடையாளம் காட்டியிருந்தார் செந்தில்பாலாஜி.
கூடவே, கணபதி ராஜ்குமார் வெற்றிக்காகவும் பாடுபட்டார். அதேபோல கரூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதிமணிக்கும் தன்னுடைய ஆதரவாளர்களை விட்டு தேர்தல் பணி செய்ய வைத்தார்.
தேர்தலில் இருவரும் வெற்றி பெற்ற செய்தி, நேற்று மாலை செந்தில்பாலாஜிக்கு தெரியப்படுத்தப்பட, அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -