விஜயபிரபாகரன், சவுமியா போராடி தோல்வி
விஜயபிரபாகரன், சவுமியா போராடி தோல்வி
விஜயபிரபாகரன், சவுமியா போராடி தோல்வி
ADDED : ஜூன் 05, 2024 03:34 AM

சென்னை : விருதுநகர் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளராக, விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். பா.ஜ., வேட்பாளராக நடிகை ராதிகா களமிறங்கினார்.
மூன்று வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவிற்கு பிந்தையகருத்துக்கணிப்பில், இழுபறி நிலை ஏற்படும் என கருத்துக்கள் பரவின. அதை பிரதிபலிக்கும் வகையில், மாணிக்கம் தாகூர் மற்றும் விஜயபிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது.
கடைசி வரை போராட்டமாகவே இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியாக மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
அன்புமணி மனைவி:
தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் முன்னணியில் இருந்து வந்தார். 15 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்தவர், அதன்பின், தி.மு.க.,வுக்கும் அவருக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டது.
கடைசிவரை போராடிய அவர், 4 லட்சத்து 11 ஆயிரத்து 367 ஓட்டுகள் பெற்று, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தி.மு.க., வேட்பாளர் மணி, 4 லட்சத்து 32,667 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.